
விஜய் நடித்த சச்சின் திரைப்படத்தின் நாளை திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்படுகிறது.
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் ஜான் மகேந்திரன் இயக்கி 2005 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சச்சின். ஜெனிலியா, வடிவேலு ஆகியோர் நடித்திருந்தனர். கலைப்புலி எஸ். தாணு தயாரித்திருந்தார்.
சந்திரமுகி படத்துடன் இணைந்து வெளியானதால் பெரிய வெற்றியைப் பெறாவிட்டாலும் ஓரளவு நல்ல வசூலை இப்படம் பெற்றது.
காதல் மற்றும் நகைச்சுவை என அனைவராலும் ரசிக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவான பாடல்களும் பெரிதும் கொண்டாடப்பட்டன.
சச்சின் திரைப்படம் 2002 இல் வெளியான நீத்தோ என்கிற தெலுங்குத் திரைப்படத்தின் ரீமேக்.
இப்படம் வெளியாகி இந்தாண்டுடன் 20 ஆண்டுகள் நிறைவடைகிறது.
இதனை முன்னிட்டு சச்சின் திரைப்படம் நாளை மறுவெளியீடு செய்யப்படுகிறது. ஆன்லைன் டிக்கெட் விற்பனையில் மட்டும் இதுவரை 52,000-க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்பனையானதாகத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, விஜய் நடித்த கில்லி திரைப்படம் கடந்தாண்டு மறுவெளியீடு செய்யப்பட்டு வசூல் சாதனை புரிந்த நிலையில் இந்தப் படமும் நல்ல வசூலைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.