நடிகர் சந்தானம் மீண்டும் நகைச்சுவை நடிகராக புதிய படத்தில் நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சந்தானம் நகைச்சுவை நடிகராக தமிழ் சினிமாவில் பெரிய வரவேற்பைப் பெற்றவர். நாயகர்களுக்கு இணையான காட்சிகளால் தனக்கென ரசிகர்களை உருவாக்கியவர் பின் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகானார்.
தொடர்ந்து, தில்லுக்கு துட்டு, ஏ1, பாரிஸ் ஜெயராஜ், டிடி ரிட்டர்ஸ் என வெற்றிப்படங்களைக் கொடுத்து தனக்கான வணிகத்தை பெருக்கிக் கொண்டார்.
இவர் நடித்த டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நாயகனாக மட்டுமே சந்தானம் நடித்து வருவதால் பல படங்களில் சரியான நகைச்சுவை நடிகர்கள் இல்லாததால் ரசிகர்களும் ஏமாற்றத்தில் இருக்கின்றனர்.
இந்த நிலையில், நடிகர் சிம்புவின் 49-வது படத்தில் சந்தானம் நகைச்சுவை நடிகராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக சந்தானம் ரூ. 13 கோடி சம்பளம் கேட்டதாகவும் அதற்கு தயாரிப்பு ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
நீண்ட காலம் கழித்து சந்தானம் காமெடியாக நடிக்க உள்ள தகவல் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. சிம்பு - சந்தானம் இணைந்து நடித்த வானம் திரைப்படம் இன்றும் ரசிகர்களின் விருப்பப்பட்டியலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: நஸ்ரியாவுக்கு என்ன ஆனது? அறிக்கையால் ரசிகர்கள் குழப்பம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.