நடிகர், இசையமைப்பாளர் இல்லாமல் திரைப்படம்; ஏஐ உதவியுடன் கன்னட திரையுலகில் புதிய மைல்கல்!
ENS

நடிகர், இசையமைப்பாளர் இல்லாமல் திரைப்படம்; ஏஐ உதவியுடன் கன்னட திரையுலகில் புதிய மைல்கல்!

கன்னட திரையுலகில், முழுவதும் செயல் நுண்ணறிவைப் பயன்படுத்தி, திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
Published on

கன்னட திரையுலகில் புதிய மைல்கல்லாக, முழுவதும் செயல் நுண்ணறிவைப் பயன்படுத்தி ஒரு திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

பெங்களூருக்கு அருகிலுள்ள சித்தேஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த நரசிம்ம மூர்த்தி என்பவர், செயல் நுண்ணறிவைப் பயன்படுத்தி லவ் யூ என்ற திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். இந்தப் படத்தில் நடிகர்கள், இசைக்குழுவினர் என மனிதர்களுக்குப் பதிலாக, முழுக்கமுழுக்க செயல் நுண்ணறிவு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.

நூதன் என்கிற கிராஃபிக் டிசைனரின் உதவியுடன் லவ் யூ படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த முழுப்படமும் வெறும் ரூ. 10 லட்சம் பட்ஜெட்டில், வெறும் ஆறுமாத காலத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது. பட்ஜெட்டில் பெரும்பாலும் மென்பொருள் உரிமத்துக்காகவே செலவிடப்பட்ட இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் வசனங்களை நரசிம்ம மூர்த்தியே எழுதியுள்ளார்.

இரு நபர்கள் மட்டுமே சேர்ந்து உருவாக்கிய இந்தப் படத்துக்கு, யு/ஏ (U/A) சான்றிதழை மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் வழங்கியுள்ளது.

6 மாதங்களுக்கு முன்னரே, 30 வெவ்வேறு செயல் நுண்ணறிவுக் கருவிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தப் படம், தற்போதைய வளர்ச்சியடைந்த செயல் நுண்ணறிவு உதவியுடன் இயக்கினால், ஆயிரம் மடங்கு மேலும் சிறப்பானதாக இருக்கும் என்று இருவரும் கூறுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com