ஒசகா திரைப்பட விருதுகள்
ஒசகா திரைப்பட விருதுகள்

ஒசகா திரைப்பட விருதுகள்: சிறந்த நடிகராக அஜித், லியோ படத்துக்கு 6 விருதுகள்!

ஒசகா தமிழ் சர்வதேச திரைப்பட விழா விருதுகளின் முழுமையான பட்டியல்...
Published on

ஒசகா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் அஜித், த்ரிஷாவுக்கு சிறந்த நடிகர், நடிகைக்கான விருது கிடைத்துள்ளது.

ஒசகா தமிழ் சர்வதேச திரைப்பட விழா 2005ஆம் ஆண்டுமுதல் விருதுகளை வழங்கி வருகின்றன.

தற்போது, 2023ஆம் ஆண்டுக்கான விருதுகளை ஒசகா தமிழ் சர்வதேச திரைப்பட விழா அறிவித்துள்ளது.

இந்த விருதுப் பட்டியலில் சிறந்த நடிகர் விருதினை நடிகர் அஜித் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சமீபத்தில் அஜித் பத்ம பூஷண் விருது பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

ஒசகா தமிழ் சர்வதேச திரைப்பட விழா 2023-க்கான விருது பட்டியல்

சிறந்த படம் - மாமன்னன்

சிறந்த நடிகர் - அஜித் குமார் (துணிவு)

சிறந்த நடிகை - த்ரிஷா கிருஷ்ணன் (லியோ)

சிறந்த ஒளிப்பதிவாளர் - மனோஜ் பரமஹம்சா (லியோ)

சிறந்த இயக்குநர் - வெற்றிமாறன் (விடுதலை-1)

சிறந்த திரைக்கதையாசிரியர் - நெல்சன், அல்ப்ரெட் பிரகாஷ் (ஜெயிலர்), விக்னேஷ் ராஜா (போர் தொழில்)

சிறந்த தயாரிப்பாளர் - மில்லியன் டாலர் ஸ்டீடியோஸ், எம்.ஆர்.பி எனடர்டெயின்மென்ட்ஸ் (குட் நைட்)

சிறந்த நடன இயக்குநர் - தினேஷ் மாஸ்டர் (லியோ)

சிறந்த துணை நடிகர் - விக்ரம் (பொன்னியின் செல்வன் -2)

சிறந்த துணை நடிகை - ஐஸ்வர்யா ராய் (பொன்னியின் செல்வன் -2)

சிறந்த எண்டர்டெயினர் - எஸ்.ஜே.சூர்யா (ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்)

சிறந்த வில்லன் - ஃபஹத் ஃபாசில் (மாமன்னன்)

சிறந்த எடிட்டர் - பிலோமின் ராஜ் (லியோ)

சிறந்த சண்டைப் பயிற்சியாளர் - அன்பறிவ் (லியோ)

சிறந்த கலை இயக்குநர் - மிலன் பெர்னாண்ட்ஸ் (துணிவு)

சிறந்த விஎஃப்எக்ஸ் -அல்ஜாக்ரா ஸ்டூடியோ (பொன்னியின் செல்வன் 2)

சிறந்த ஒலிக் கலவை - எஸ்.ஒய்.என்.சி சினிமாஸ் (லியோ)

விமர்சன ரீதியா சிறந்த படம் - குட் நைட்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com