
ஆடுஜீவிதம் திரைப்படம் எதனால் ஒரு தேசிய விருதுக்கூட பெறவில்லை என தேர்வுக்குழுவை சினிமா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
மலையாளத்தில் மிகவும் புகழ்பெற்ற ஆடுஜீவிதம் நாவல் (தி கோட் லைஃப்) அதே பெயரில் திரைபடமாக எடுக்கப்பட்டது. இந்தப் படத்தில் நாயகனாக பிருத்விராஜும், நாயகியாக அமலா பாலும் நடித்துள்ளனர்.
பிளெஸ்ஸி ஐப் தாமஸ் இந்தப் படத்தினை இயக்கியுள்ளார். கே.எஸ்.சுனில் ஒளிப்பதிவு செய்ய படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளாக இப்படத்தின் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், 2024, மார்ச் 28 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியானது.
71-ஆவது தேசிய விருது நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.
உலக அளவில் கவனம் ஈர்க்கப்பட்ட ஆடுஜீவிதம் படத்துக்கு ஏன் தேசிய விருது வழங்கவில்லை என சினிமா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
காரணம் என்ன?
இந்தப் படம் 2023, டிச.31ஆம் தேதி தணிக்கைச் செய்யப்பட்டது. அதன்படி தேசிய விருதுக்கு தகுதியானதுதான். இருப்பினும் இந்தப் படம் 2024-இல் வெளியாகியதால் 72-ஆவது தேசிய விருதுக்கு போட்டியிடவும் வாய்ப்பிருக்கிறது.
இது குறித்து படக்குழு எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. இருப்பினும ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்துக்குள்ளாகியுள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.