தடக் 2: அமோக வரவேற்பில் ஹிந்தி பரியேறும் பெருமாள்!

ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வெளியான பரியேறும் பெருமாள் (தடக் 2) குறித்து...
Dhadak 2 movie poster.
தடக் 2 படத்தின் போஸ்டர். படம்: தர்மா புரடக்‌ஷன்ஸ்.
Published on
Updated on
1 min read

ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வெளியான பரியேறும் பெருமாள் (தடக் 2) ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது.

தமிழில் மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள் ஹிந்தியில் தடக் 2 படமாக நேற்று (ஆக.1) வெளியானது.

கரண் ஜோஹரின் தர்மா புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் ஷாசியா இக்பால் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

முன்னணி கதாபாத்திரங்களில் சித்தார்த் சதுர்வேதி, திருப்தி திம்ரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில், படம் குறித்து வட மாநிலத்தவர்கள் சமூக வலைதளத்தில் புகழ்ந்து வருகிறார்கள்.

சமீபத்தில் வெளியான சையாரா படம் பார்த்து அழுத மக்கள் மீண்டும் இந்தப் படத்தைப் பார்த்து நிஜமாகவே கூடுதலாக அழுவார்கள். எந்தவிதமான சாயம் இல்லை. உண்மையான சாதியின் கோர முகத்தை காட்டியுள்ளார்கள் என ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.

இன்னொரு ரசிகர், இந்தப் படம் சையாரா அளவுக்கு பாக்ஸ் ஆபிஸில் வசூலிக்காமல் செல்லலாம். ஆனால், அதைவிடவும் இந்தப் படம் சிறப்பாக இருக்கிறது.

தடக் 2 சிறப்பாக எழுதப்பட்ட இந்தாண்டின் சிறந்த படம் என புகழ்ந்துள்ளார்.

இயக்குநர் நாகராஜ் மஞ்சுலே இயக்கத்தில் மராத்தியில் வெளியாகி அதிர்வைக் கிளப்பிய சாய்ரத் (sairat) திரைப்படம் ஹிந்தியில் தடக் என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Summary

Pariyerum Perumal (Dhadak 2), which was remade and released in Hindi, is receiving a great response from the fans.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com