
கூலி இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினி நடிகை ஷ்ருதி ஹாசனை கிளமாரான நடிகை எனப் பேசியது சர்சையக் கிளப்பியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள கூலி திரைப்படத்தின் டிரைலர் நேற்று (ஆக.2) வெளியாகியது.
இந்தப் படத்தில் கமலின் மகளும் நடிகையுமான ஷ்ருதி ஹாசன் ப்ரீத்தி எனும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினி ஷ்ருதி ஹாசன் குறித்து பேசியதாவது:
கூலி படத்தில் ஒரு முக்கியமான பெண் கதாபாத்திரம் இருக்கிறது. இதில் யார் நடிக்கப்போகிறார்கள் என லோகேஷிடம் கேட்டேன். அதற்கு அவர், ’ஷ்ருதி சார்’ என்றார். உண்மையாகவா?
நான் ஷ்ருதியை 3 படத்தின்போது பார்த்திருக்கிறேன். அவர் மிகவும் கிளமாரான நடிகையாச்சே. இந்தக் கதாபாத்திரத்திற்கு எப்படி? என்று லோகேஷிடன் கேட்டேன். அதற்கு அவர், ‘அவரது அப்பா படங்களில் நடிப்பதைவிட உங்களது படத்தில் நடிக்கதான் ஆர்வமாக இருக்கிறார்’ என லோகேஷ் கூறியதாக ரஜினி பேசினார்.
”ஏன் ஒரு நடிகையை ஒரே மாதிரி டைப் காஸ்ட் செய்ய வேண்டும்? அவர் கிளாமர் ரோலில் மட்டும்தான் நடிப்பாரா?” என ஷ்ருதி ஹாசன், கமல் ரசிகர்கள் ரஜினியின் இந்தப் பேச்சினை சமூக ஊடகங்களில் விமர்சித்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.