ஷாருக்கான் சிறந்த நடிகரா? தேசிய விருதுக் குழுவை விளாசிய ஊர்வசி!

தேசிய விருதுகள் அறிவிப்பு குறித்து ஊர்வசி பேசியது...
 ஊர்வசி
ஊர்வசி
Published on
Updated on
2 min read

சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதை வென்ற ஊர்வசி தன் அதிருப்தியைப் பதிவு செய்துள்ளார்.

2023 ஆம் ஆண்டு வெளியான இந்திய திரைப்படங்களுகான தேசிய விருதுகள் கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது. இந்த 71-வது தேசிய விருதுகள் அறிவிப்பில், சிறந்த நடிகருக்கான விருதை ஷாருக்கானும், விக்ராந்த் மாஸேவும் வென்றனர்.

சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது மலையாளத்திலிருந்து நடிகர் விஜய ராகவனுக்கும் சிறந்த துணை நடிகைக்கான விருது நடிகை ஊர்வசிக்கும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், தேசிய விருதுகள் குறித்து பேசிய நடிகை ஊர்வசி, “ஷாருக்கானை சிறந்த நடிகராகத் தேர்வு செய்வதற்கான அளவுகோள்கள் என்ன? சிறந்த மூத்த நடிகரான விஜய ராகவனை வெறும் துணை நடிகராக எப்படி குறுக்கலாம்? அவருக்கு சிறந்த நடிகருக்கான சிறப்பு நடுவர் விருது (Special Jury Award) வழங்கியிருக்க வேண்டாமா?

நடிகர் விஜய ராகவன். பூக்காலம் ஒப்பனையில்... (இரண்டாம் படம்)
நடிகர் விஜய ராகவன். பூக்காலம் ஒப்பனையில்... (இரண்டாம் படம்)

குட்டேட்டன் (விஜய ராகவன்) நடித்த பூக்காலம் திரைப்படத்தில் அவரின் இணையாக நடிக்க முதலில் என்னைத்தான் அணுகிறார்கள். ஆனால், அக்கதாபாத்திரத்திற்கு தினமும் 9 மணிநேரம் ஒப்பனை செய்ய வேண்டுமென்றதால் அப்படத்திலிருந்து விலகினேன்.

பல கோடி கொடுத்தாலும் நான் சில விஷயங்களைச் செய்ய மாட்டேன். அப்படத்திற்காக விஜய ராகவன் எவ்வளவு கஷ்டப்பட்டு நடித்திருப்பார்? அவரை எப்படி துணை நடிகர் எனச் சொல்லி விருது கொடுக்க முடிகிறது? ஷாருக்கானுடன் ஒப்பிடும்போது இவர் நடிப்பை எப்படி மதிப்பிட்டார்களோ!

ஏன் இந்தாண்டு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்படவில்லை. என்ன நெறிமுறைகள் இவை? வேறு ஏதாவது அளவுகோள்கள் இருக்கின்றனவா? தமிழில் நான் நடித்த ஜே. பேபி திரைப்படமும் சிறந்த நடிகைக்கான விருது பரிந்துரையில் இருந்தது. அந்தப் படத்தைப் பார்த்தார்களா இல்லையா?

ஊர்வசி, ஜே. பேபி திரைப்படத்தில்....
ஊர்வசி, ஜே. பேபி திரைப்படத்தில்....

நீங்கள் கொடுப்பதையெல்லாம் அமைதியாக வாங்கிச் செல்ல தேசிய விருதுகள் ஒன்றும் அரசு ஓய்வூதியப் பணங்கள் கிடையாது. நீங்கள் ஒன்றை கொடுத்தால், அதை நாங்கள் மகிழ்ச்சியாகப் பெற வேண்டும்.

மலையாளத்தின் சிறந்த திரைப்படமான ஆடுஜீவிதம் முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. மலையாள சினிமாவுக்கான தேசிய விருதுகள் குறித்து மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி குரல் எழுப்ப வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

ஊர்வசியின் இந்தக் கண்டனக் குரல் மலையாளத் திரை ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால், தேசிய விருதை வாங்க ஊர்வசி செல்வாரா என்பதும் கேள்விக்குறியாகியுள்ளது!

Summary

Actor Urvashi slams National Award jury for giving her award in supporting category

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com