
பாக்கியலட்சுமி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கடைசி வாரத்தில், அதன் டிஆர்பி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சின்ன திரை தொடர்களுக்கு ஒவ்வொரு வாரமும் டிஆர்பி புள்ளிகள் கணக்கிடப்பட்டு வருகின்றன. இந்த புள்ளிப் பட்டியலின்படி, மக்கள் அதிகம் விரும்பிப் பார்க்கும் தொடர் எது என்பதை தீர்மானித்துக்கொள்ளலாம்.
அதன்படி தற்போது வெளியாகியுள்ள டிஆர்பி பட்டியலில் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ள தொடர்கள் குறித்து காணலாம்.
ஆதிக்கம் செலுத்தும் சன் - விஜய் டிவி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சின்ன மருமகள் தொடர் 6.65 புள்ளிகளுடன் 10-வது இடத்தில் உள்ளது. கடந்த வாரமும் 10வது இடத்திலேயே இருந்தது.
விஜய் தொலைக்காட்சியில் புகழ் பெற்ற தொடரான, பாண்டியன் ஸ்டோர்ஸ் - 2 தொடர், 7.26 புள்ளிகளுடன் இந்த வாரம் 9-வது இடத்தைப் பிடித்துள்ளது.
அய்யனார் துணை தொடர் இந்த வாரம் 7.64 புள்ளிகள் பெற்று 8வது இடத்துக்கு பின்னுக்குச் சென்றுள்ளது. கடந்த வாரம் இத்தொடர், 6வது இடத்தில் இருந்து.
சன் தொலைக்காட்சியின் அன்னம் தொடரானது 7.92 புள்ளிகள் பெற்று இந்த வாரம் 7-வது இடத்தைப் பிடித்துள்ளது.
சன் தொலைக்காட்சியில் கேப்ரியல்லா நடிப்பில் ஒளிபரப்பாகி வரும், மருமகள் தொடர், 8.07 புள்ளிகளுடன் இந்த வாரம் 7வது இடத்தில் இருந்து 6வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் வெற்றி வசந்த் - கோமதி பிரியா நடிப்பில் ஒளிபரப்பாகிவரும் சிறகடிக்க ஆசை தொடர், இந்த வாரம் 8.45 புள்ளிகளுடன் 4வது இடத்தில் இருந்து 5-வது இடத்துக்குச் சென்றுள்ளது.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் - 2 தொடர் இந்த வாரம் 8.90 புள்ளிகளுடன் 4-வது இடத்தைப் பிடித்துள்ளது.
சைத்ரா ரெட்டி - சஞ்சீவ் கார்த்திக் நடிக்கும் கயல் தொடர் விறுவிறுப்பை எட்டியுள்ளதால், இந்த வாரம் 8.95 புள்ளிகள் பெற்று மீண்டும் 3வது இடத்தை பிடித்துள்ளது.
ஸ்வாதி கொண்டே - நியாஸ் கான் நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் மூன்று முடிச்சு தொடர், 9.88 டிஆர்பி புள்ளிகளுடன் 3வது இடத்தில் இருந்து மீண்டும் 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
இயக்குநர் தனுஷ் இயக்கத்தில், மணீஷா நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் சிங்கப் பெண்ணே தொடர், 10.38 டிஆர்பி புள்ளிகளுடன் இந்த வாரமும் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனால், இந்த வாரம் இத்தொடர் அதிக டிஆர்பி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், முதல் 10 இடங்களில் பாக்கியலட்சுமி தொடர் இடம்பெறாமல் ஏமாற்றம் அளித்துள்ளது.
இதையும் படிக்க | எதிர்நீச்சல் - 2, இனி 6 நாள்களும் ஒளிபரப்பாகாது!
As the serial of Baakiyalakshmi has reached its finale, information about its TRP in the last week has been released.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.