
நடிகை ஹுமா குரேஷியின் சகோதரர் பார்க்கிங் பிரச்னையால் கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென் கிழக்கு தில்லியான போகல் பகுதியில் ஏற்பட்ட பார்க்கிங் பிரச்னையால் ஹுமா குரேஷியின் சகோதரர் ஆசிப் குரேஷி (42) உயிரிழந்துள்ளார்.
போகல் பகுதியில் சர்ச் தெருவில் வியாழக்கிழமை (ஆக.7) இரவு ஏற்பட்ட பார்க்கிங் தகராறில் உஜ்வால் (19), கௌதம் (18) என்ற இரண்டு இளைஞர்கள் சேர்ந்து கூர்மையான பொருளினால் ஆசிப்பை மார்ப்பில் தாக்கியதில் காயமடைந்து உயிரிழந்துள்ளார்.
இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.
இது குறித்து காவல்துறையினர் கூறியதாவது:
இந்தச் சம்பவம் ஆக.7ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு நடந்திருக்கிறது. ஆசிப்பின் வீட்டிற்கு முன்பாக ஸ்கூட்டரை நிறுத்தியிருந்த நபருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்த வாக்குவாதம் உடனடியாக கைகலப்பாக மாறியுள்ளது. இரண்டு இளைஞர்கள் அவரை கூர்மையான் ஆயுதத்தினால் மார்புப் பகுதியில் குத்தியுள்ளனர்.
காயம்பட்ட ஆசிப் சரிந்து விழ, அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, அவர் உயிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலை செய்த இரண்டு இளைஞர்களும் அதே தெருவில் ஆசிப்பின் வீட்டுக்கு அருகில் இருக்கில் இரண்டாவது தளத்தில் வசித்து வருகிறார்கள்.
இருவரையும் கைது செய்து விசாரணை நடத்து வருகிறோம் எனக் கூறியுள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.