வெளியானது சைத்ரா ரெட்டியின் புதிய இணையத் தொடர்!

சைத்ரா ரெட்டியின் புதிய இணையத் தொடர் வெளியீடு தொடர்பாக...
வெளியானது சைத்ரா ரெட்டியின்  புதிய இணையத் தொடர்!
Published on
Updated on
1 min read

சைத்ரா ரெட்டி நடிக்கும் புதிய இணையத் தொடரின் முதல் 4 எபிசோடுகள் வெளியாகியுள்ளன.

நடிகை சைத்ரா ரெட்டி சரிகம நிறுவனம் தயாரிக்கும் புதிய இணையத் தொடரில் பிரதான பாத்திரத்தில் நடிக்கிறார். இத்தொடரில் குரு லட்சுமணன் நாயகனாக நடிக்கிறார். இந்தத் தொடருக்கு லவ் ரிட்டர்ன்ஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

மேலும், இந்தத் தொடரில் பர்வீன், பேபி லிதன்யா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். சதாசிவம் செந்தில்ராஜன், அர்ஜுன் டிவி ஆகியோர் இயக்குகிறார்கள்.

லவ் ரிட்டர்ன்ஸ் இணையத் தொடர், திருமணமான நாயகன் வாழ்க்கையில் முன்னாள் காதலி திரும்பவும் வருகிறார். முன்னாள் காதலி மற்றும் மனைவியை நாயகன் எதிர்கொள்ளும் சவால்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.

நகைச்சுவை பாணியில் எடுக்கப்பட்டுள்ளதால், இந்தத் இணையத் தொடர் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்த்துள்ளது.

லவ் ரிட்டர்ன்ஸ் இணையத் தொடர் சரிகம யூடியூப் சேனலில், ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை 4 எபிசோடுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Summary

The first 4 episodes of the new web series starring Chaitra Reddy have been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com