
கூலி படத்தின் கேரள முன்பதிவு ஒரு மணி நேரத்தில் ரூ.1 கோடியை வசூலித்து அசத்தியுள்ளது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கூலி திரைப்படம் வருகிற ஆக. 14 ஆம் தேதி திரையரங்களில் வெளியாகவுள்ளது.
பான் இந்திய பிரபலங்கள் நடித்திருப்பதால் ரஜினிகாந்த்தின் அதிக வசூல் திரைப்படமாக இப்படம் அமையலாம் என எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன.
இந்நிலையில், இன்று (ஆக.8) கேரளத்தில் முன்பதிவுகள் தொடங்கின.
கேரள ரசிகர்கள் கூலி பட டிக்கெட்டை வாங்க திரையரங்கில் முண்டியடித்துகொண்டு ஓடும் காட்சிகள் வைரலாகி வருகின்றன.
இந்நிலையில், ஆன்லைனில் ஒரு மணி நேரத்தில் ஒரு கோடி ரூபாய்க்கு டிக்கெட் விற்பனையாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கேரளாவில் ஆன்லைன் முன்பதிவுகள் தொடங்கியதும் பிஎம்எஸ் டிக்கெட் புக்கிங்கில் 50 ஆயிரத்தை நெருங்கிவிட்டது.
பல ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி திரைப்படம் ஏ சான்றிதழ் பெற்றிருப்பதால் குழந்தைகள் பார்க்க முடியாது என்பது ஒரு பின்னடைவாக இருந்தாலும் ரூ. 1,000 கோடி வசூலிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.