பாடகி ஜொனிடா காந்தி பெண்களின் ஆடை சுதந்திரம் குறித்து சமூக வலைதளத்தில் விமர்சிப்பவர்களுக்கு பதிலளித்துள்ளார்.
பஞ்சாபி குடும்பத்தில் பிறந்த ஜொனிடா காந்தி (35) தில்லியைச் சேர்ந்தவர். கனடாவில் படித்த இவர் முதல்முறையாக 2013-இல் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் பாடல் பாடினார்.
தமிழில் ஓ காதல் கண்மணி படத்தில் ‘மென்டல் மனதில்..’ எனும் பாடலில் அறிமுகமாகி 24, காற்று வெளியிடை, சர்கார், டாக்டர், பீஸ்ட், ஜவான் எனத் தமிழ் ரசிகர்களின் பிடித்தமான பாடல்களைப் பாடியவர்கள் பட்டியலில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
சமீபத்தில் இவரது ஆடைத் தேர்வு குறித்து சமூக வலைதளத்தில் பேசுபொருளானது. இந்நிலையில், இது குறித்து ஜொனிடா காந்தி தனது இன்ஸ்டா பக்கத்தில் கூறியதாவது:
பாடகி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டுமா?
சில மக்கள் பாடகி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டுமென நினைக்கிறார்கள். ஒரு பெண் எப்படி நினைக்கிறாளோ அப்படியே இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.
சில நேரங்களில் மேடையில் ஆடையில் ஒளிரும் ஒளித்தகடுகளுடன், சில நேரங்களில் நிகழ்ச்சியில் புடவையுடன், பயிற்சியின்போது தளர்வான ஆடைகளுடன், சில நேரங்களில் கேமிராக்கு முன்பாக நூலிழைகளான உடைகளுடன் இருக்கலாம்!
அழகாக இருப்பதால் நமது திறமை இல்லாதது ஆகாது. சமூகத்தால் கருதப்படும் பாதுகாப்பு இல்லாத உடையினால் நமது வலிமை என்றும் மறையப்போவதில்லை. உங்களுக்குப் பிடிக்கவில்லை எனில் தாராளமாக இங்கு கமெண்ட் செய்துவிட்டுச் செல்லலாம்... எனக் கூறியுள்ளார்.
Singer Jonita Gandhi has responded to critics on social media about women's freedom of dress.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.