
நடிகர் நானி நடித்துள்ள தி பாரடைஸ் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.
நடிகர் நானி தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக வியாபார ரீதியாகவும் பெரிய நட்சத்திர நடிகராக உருவெடுத்துள்ளார்.
நானி நடிப்பில் கடைசியாக வெளியான சரிபோத சனிவாரம், ஹிட் - 3 ஆகிய திரைப்படங்கள் வசூல் ரீதியாக ரூ. 100 கோடியைக் கடந்ததால் அவரது படங்களின் பட்ஜெட்டும் அதிகரித்து வருகின்றன.
இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் தி பாரடைஸ் என்கிற படத்தில் நடிக்கிறார். இப்படம் ஆக்சன் பின்னணியில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.
இந்நிலையில், படத்தின் முதல்பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.
இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, பெங்காலி, ஸ்பானிஷ், ஆங்கிலத்திலும் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.