மகா அவதார் நரசிம்மா திரைப்படம் வசூல் வேட்டையை நிகழ்த்தி வருகிறது.
ஹொம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிப்பில் அனிமேஷன் திரைப்படமாக உருவான மகாவதாரம் நரசிம்மா இந்தியளவில் மிகப்பெரிய கவனம் பெற்றுள்ளது.
இந்த அனிமேஷன் படத்தை அஸ்வின் குமார் இயக்கியுள்ளார். அனிமேஷனில் வரும் காட்சிகளின் தரம் கதைக்கு நியாயம் சேர்க்கும் வகையில் இருந்ததால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிகக்கூடிய படமாக வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த நிலையில், இப்படம் உலகளவில் ரூ. 150 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர்.
அடுத்த வாரம் வரை பெரிய படங்கள் வெளியாகாது என்பதால் இப்படம் ரூ. 200 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைக்கும் எனத் தெரிகிறது.
இதையும் படிக்க: கேப்டன் பிரபாகரன் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.