சர்வதேச திரைப்பட விழாவில் விருதுகளைக் குவிக்கும் ரசவாதி!

நைஸ் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதுக்கு ரசவாதி திரைப்படம் தேர்வாகியுள்ளது.
சர்வதேச திரைப்பட விழாவில் விருதுகளைக் குவிக்கும் ரசவாதி!
Published on
Updated on
1 min read

சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதுக்கு ரசவாதி திரைப்படம் தேர்வாகியுள்ளது.

பிரான்சில் நடைபெற்ற நைஸ் சர்வதேச திரைப்பட விழாவில், சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை ரசவாதி பெற்றிருப்பதாக, படத்தின் இயக்குநர் சாந்தகுமார் அறிவித்துள்ளார். ஒளிப்பதிவாளர்கள் சரவணன் இளவரசு மற்றும் சிவா-வுக்கு வாழ்த்து தெரிவித்த இயக்குநர் சாந்தகுமார், இது ரசவாதியின் 5-ஆவது சர்வதேச வெற்றி என்றும் கூறியுள்ளார்.

பிரான்சின் நைஸ் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதைப் பெறுவதில் முற்றிலும் மகிழ்ச்சியடைகிறேன்-நம்பமுடியாத 11 உலகளாவிய பரிந்துரைக்கப்பட்டவர்களில் தனித்து நிற்கிறது! சரவணன் இளவரசு மற்றும் சிவாவுக்கு வாழ்த்துக்கள்.

இந்தப் படம் ரசிகர்களின் வரவேற்பைக் கடந்து சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளைக் குவித்த வண்ணமுள்ளது.

15-வது தாதா சாஹிப் பால்கே திரைப்பட விழா மற்றும் நியூ ஜெர்ஸியின் இந்திய மற்றும் சர்வதேச திரைப்பட விழா ஆகியவற்றில் ‘ரசவாதி’ படத்துக்காக அர்ஜுன் தாஸ் சிறந்த நடிகருக்கான விருதுகளை வென்றார்.

இந்தாண்டு (2025) துவக்கத்தில், லண்டன் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த ஒலி வடிவமைப்பு விருதை, ரசவாதி படத்துக்காக ஒலி வடிவமைப்பாளர் தபாஸ் நாயக் பெற்றார்.

இந்த நிலையில், நைஸ் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதையும் ரசவாதி படத்தின் மூலம் சரவணன் இளவரசு மற்றும் சிவா பெற்றுள்ளனர்.

இயக்குநர் சாந்தகுமார் - நடிகர் அர்ஜுன் தாஸ் கூட்டணியில் ரொமாண்டிக் கிரைம் டிராமாவாக உருவான திரைப்படம் ரசவாதி. 

2024-ல் இசையமைப்பாளர் தமன் இசையில் வெளியான இந்தப் படத்தில் நடிகர்கள் தன்யா ரவிச்சந்திரன், சுஜித் சங்கர், ரம்யா சுப்ரமணியம், ஜி.எம். சுந்தர், ரேஷ்மா வெங்கடேஷ், சுஜாதா மற்றும் ரிஷிகாந்த் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

Summary

Rasavathi wins award at NICE International Film Festival

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com