
மகேஷ் பாபு - ராஜமௌலி படத்தின் முதல் போஸ்டர் வெளியாகியுள்ளது.
ஆர்ஆர்ஆர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பின் இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி நடிகர் மகேஷ் பாபுவை நாயகனாக வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார்.
இப்படம் காசியின் வரலாற்றைப் பேசும் தொன்மக் கதையாக உருவாகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்காக பல கோடி ரூபாயில் அவர் அமைத்த செட் சமீபத்தில் சமூக வலைதளத்தில் வைரலானது.
இந்நிலையில், ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளார். அதில் மகேஷ் பாபுவின் முகமில்லாத கழுத்துப் பகுதியை மட்டுமே காண்பித்துள்ளார்கள்.
இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் நவம்பரில் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ராஜமௌலி தனியாக ஒரு பதிவில் கூறியதாவது:
இந்திய, உலக சினிமா ரசிகர்கள், மகேஷ் பாபு ரசிகர்களுக்கும்...
படப்பிடிப்பைத் தொடங்கி பல நாள்கள் ஆகின்றன. உங்களது ஆர்வம் குறித்து மகிழ்கிறேன். படத்தின் கதை, உருவாக்கம் மிகப்பெரியது. இதனை விளக்க ஒரு போஸ்டரோ, பத்திரிகையாளர் சந்திப்போ சரியாக இருக்காது.
நாங்கள் உருவாக்கியுள்ள உலகத்தின் சாரத்தை, ஆழத்தை, உங்களுக்குக் காட்ட வேலைப் பார்த்து வருகிறோம். அது வரும் நவம்பரில் வெளியிடப்படும்.
இதுவரை பார்க்காத ஒன்றை உங்களுக்கு அளிக்க முயற்சிக்கிறோம். உங்களது காத்திருப்புக்கு நன்றி எனக் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.