நடிகர் சூரி தன் சம்பளத்தை உயர்த்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் சூரி விடுதலை, கருடன், கொட்டுக்காளி படங்களைத் தொடர்ந்து இறுதியாக இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் மாமன் படத்தில் நடித்திருந்தார்.
இவர் நடித்த படங்கள் அனைத்தும் வணிக ரீதியான வெற்றிகளைப் பதிவு செய்தது. குறிப்பாக, கருடன் மற்றும் மாமன் நல்ல வசூலையே ஈட்டின.
இதனால், சூரியை வைத்து படம் தயாரிக்க பல தயாரிப்பு நிறுவனங்கள் முன்வருகின்றன. அதேநேரம், தனக்குக் கிடைத்த தொடர் வெற்றிகள் மூலம் சூரி தன் சம்பளத்தை ரூ. 10 - 12 கோடி வரை உயர்த்தியுள்ளாராம்.
நகைச்சுவை நடிகராக இருந்தபோது லட்சக் கணக்கில் சம்பளம் வாங்கியவர் வெற்றி நாயகனாக மாறியபோது முன்னணி நடிகர்களுக்கு இணையாக சம்பளத்தை உயர்த்தியது பலருக்கும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.