
கூலி திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி, ஒரு நாளுக்கு 5 காட்சிகளை திரையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் நாளை மறுநாள் காலை 9 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை 5 சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் கூலி திரைப்படம் ஆக.14-ஆம் தேதி வெளியாக உள்ளதால் உலகம் முழுவதும் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கடந்த சில நாட்களின் முன்பதிவுகளே, முன் எப்போதுமில்லாத வகையில் புதிய சாதனையை படைத்துள்ளன. சில தனியார் நிறுவனங்கள், திரைப்படம் வெளியாகும் 14 தேதி விடுமுறை அறிவித்துள்ளன.
இந்த வாரம் முழுவதுமே டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு இன்று (ஆக. 12) அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணிக்கு தான் முதல் காட்சி வெளியாகிறது. நள்ளிரவு 2 மணி வரை 5 காட்சிகளை திரையிடலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனினும், கேரளம், ஆந்திரம், கர்நாடகம் போன்ற அண்டை மாநிலங்களில் முதல் காட்சி காலை 6 மணிக்கு வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க | மோனிகா பாடலுக்காக மோனிகா பெலூச்சி கூறியதென்ன? பூஜா ஹெக்டே பெருமிதம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.