கூலி திரைப்படத்தில் நடிகர் ரஜினியின் கதாபாத்திரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படம் நாளை (ஆகஸ்ட் 14) வெளியாகவுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது.
தமிழகத்தைத் தாண்டி கேரளம், கர்நாடகம் மற்றும் ஆந்திரம் பகுதிகளிலும் முதல் நாளுக்கான டிக்கெட்கள் அபாரமாக விற்றுத் தீர்ந்துள்ளன. இதனால், கூலியின் முதல் நாள் வசூல் ரூ. 150 கோடிக்கும் அதிகமாகத்தான் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இப்படத்தில் நடிகர் ரஜினிக்கு ஜோடி யாராக இருக்கும் என ரசிகர்களிடம் கேள்வி எழுந்துள்ளது. நடிகை ஸ்ருதி ஹாசன் சத்யராஜின் மகளாக நடித்துள்ளதால் அவர் ரஜினிக்கு ஜோடியாக இருக்க வாய்ப்பில்லை.
டிரைலர் வசனத்திலும், ‘உங்களுக்கு யாரும் இல்லை. தனியாக வாழ்ந்து பழகிவிட்டீர்கள்’ என ரஜினி குறித்து கூறப்படுகிறது. இதனால், இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியென யாருமில்லை எனக் கருதப்படுகிறது.
அதேநேரம், படத்தில் பிளாஷ்ஃபேக் காட்சிகள் இடம்பெற்றுள்ளதால் அப்போது ரஜினிக்கு மனைவி இருந்திருக்கலாம் அது யாராக இருக்கும்? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன. எல்லாக் கேள்விகளுக்கும் நாளை பதில் கிடைக்கும்!
இதையும் படிக்க: கூலி எப்படி இருக்கிறது? துணை முதல்வரின் ரிவ்யூ!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.