நம் சூப்பர் ஸ்டாரை பாசத்துடன் பாராட்டுகிறேன்: கமல் ஹாசன்

ரஜினிகாந்த்தை வாழ்த்திய கமல் ஹாசன்...
நம் சூப்பர் ஸ்டாரை பாசத்துடன் பாராட்டுகிறேன்: கமல் ஹாசன்
Published on
Updated on
1 min read

நடிகர் ரஜினிகாந்த்தின் 50 ஆண்டுகால சினிமா பயணத்திற்கு நடிகர் கமல் ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அபூர்வ ராகம் திரைப்படத்தில் அறிமுகமாகி தமிழ் சினிமாவின் அபூர்வங்களில் ஒன்றாகவே இருக்கும் ரஜினிகாந்த் தன் திரைப்பயணத்தில் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறார்.

இந்த நீண்ட பயணத்தில் அவருடன் நடித்த நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் பலரும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகர் கமல் ஹாசன் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சினிமாவின் அரை நூற்றாண்டு காலத் திறமையைக் குறிப்பிடுவதுபோல், என் அன்பு நண்பர் ரஜினிகாந்த் சினிமாவில் 50 ஆண்டுகளைக் கொண்டாடுகிறார்.

நமது சூப்பர் ஸ்டாரை நானும் பாசத்துடனும், பாராட்டுடனும் கொண்டாடுகிறேன். இந்தப் பொன் விழாவிற்கு ஏற்ற உலகளாவிய வெற்றியைக் கூலி திரைப்படம் பெற வாழ்த்துகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

Summary

actor kamal haasan shares his wishes to actor rajinikanth for his 50th year in cinema

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com