சிறுமி பாலியல் வன்கொடுமை... பிரபல மலையாள நடிகை கைது!

பாலியல் வன்கொடுமை வழக்கில் நடிகை கைது...
மினு முனீர்
மினு முனீர்
Published on
Updated on
1 min read

பிரபல மலையாள நடிகை மினு முனீர் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மலையாளத்தில் பிரபல நடிகையாக இருக்கும் மினு முனீர், 10 ஆண்டுகளுக்கு முன் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி 14 வயது சிறுமியைச் சென்னை அழைத்து வந்ததாகவும் அப்போது சிறுமி 4 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகவும் வழக்கு பதியப்பட்டது.

அன்று பாதிக்கப்பட்ட சிறுமி 10 ஆண்டுகள் கழித்து சென்னை திருமங்கலம் மகளிர் காவல்நிலையத்தில் மினு முனீர் மீது புகார் அளித்திருந்தார்.

புகாரைப் பெற்ற காவல்துறை உடனடியாக விசாரணையில் இறங்கியதுடன் கேரளத்திலிருந்த மினு முனீரைக் கைது செய்து இன்று சென்னை அழைத்து வந்துள்ளனர்.

இங்கு நீதிமன்றக் காவலில் எடுக்கப்பட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரிக்கப்பட உள்ளது.

ஏற்கனவே, மீ டூ பாலியல் குற்றச்சாட்டுகளின்போது நடிகை மினு முனீர், நடிகர் ஜெயசூர்யா தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறியது மலையாள சினிமாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

malayalam actor minu muneer arrested for sexual violence case in chennai.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com