அமரன்கள் செய்த அநீதிகளைப் பேசும் தண்டகாரண்யம்..! சர்ச்சையான பதிவு?

கெத்து தினேஷ் நடித்துள்ள தண்டகாரண்யம் படத்தின் புதிய அப்டேட்...
Amaran, Thandakaranyam film poster.
அமரன், தண்டகாரண்யம் பட போஸ்டர். படங்கள்: இன்ஸ்டா / சிவகார்த்திகேயன், முத்துக்குமார்.
Published on
Updated on
1 min read

நீலம் தயாரிப்பில் உருவாகியுள்ள தண்டகாரண்யம் படத்தின் போஸ்டரைப் பகிர்ந்து நடிகர் முத்துகுமார் பதிவிட்டுள்ளது கவனம் ஈர்த்துள்ளது.

இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு படத்தை இயக்கிய அதியன் ஆதிரை தண்டகாரண்யம் எனும் படத்தை இயக்கியுள்ளார்.

இதில் கெத்து தினேஷ், கலையரசன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். ஜஸ்டின் பிரபாகர் இசையமைக்க, பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். 

சமீபத்தில் தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான லப்பர் பந்து நல்ல வரவேற்பை பெற்றது.

லப்பர் பந்து வெற்றிக்குப் பிறகு தினேஷின் இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகமாகியிருக்கிறது.

இந்தப் படத்துக்கு யு/ஏ தணிக்கைச் சான்றிதழ் கிடைத்துள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படுமெனக் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், சார்பட்டா பரம்பரை, மகான் படங்களில் நடித்து பிரபலமான நடிகர் முத்துக்குமார் இதனைப் பகிர்ந்து, “அமரன்கள் செய்த அநீதிகளைப் பேசும் தண்டகாரண்யம்” எனப் பதிவிட்டுள்ளார்.

Actor Muthukumar's post.
நடிகர் முத்துக்குமாரின் பதிவு. படம்: இன்ஸ்டா / ஆக்டர் முத்துக்குமார்.

கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்த அமரன் திரைப்படம் வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தினை இயக்குநர் கோபி நயினார் கடுமையாக விமர்சித்திருந்தார்.

நீலம் புரடக்‌ஷன்ஸும் அதே தலைப்பில் பதிவிட்டுள்ளது. அமரன் படத்தைக் குறிப்பிட்டு பதிவிடப்பட்டதா அல்லது வேறு பொருளிலா என்ற விளக்கம் எதுவும் தரப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

Summary

Actor Muthukumar's post sharing the poster of the film Dhandakaranyam, produced by Neelam, has attracted attention.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com