
நந்தன் திரைப்படத்தின் மூலம் தமிழ்ச் சமூகத்தில் மகத்தான மாற்றம் நிகழ்ந்ததாக நடிகர் சசிகுமார் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.
சசிகுமார் நடிப்பில் இயக்குநர் இரா. சரவணன் எழுதி, இயக்கிய படம்தான் நந்தன்.
இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்னும், வெளியான பின்னும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்தப் படத்தை பார்த்த ரசிகர்கள்,"ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அதிகார பகிர்வு குறித்த யதார்த்த நிலையை நந்தன் துணிச்சலுடனும் எடுத்துரைத்திருக்கிறார்” என பாராட்டினர்.
ஓடிடியிலும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் ரஜினி உள்பட பலரும் பாரட்டினார்கள்.
இந்நிலையில், நேற்றிரவு இது குறித்த பதிவு ஒன்றினை சசிகுமார் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
சுதந்திர நாளில் தமிழ்நாட்டில் தற்போது பொறுப்பில் உள்ள தலித் பஞ்சாயத்துத் தலைவர்கள் அனைவரும் கொடியேற்றி இருக்கிறார்கள். மகத்தான மாற்றத்திற்குத் துணை நின்ற அனைவருக்கும் ‘நந்தன்’ சார்பில் நன்றி எனக் கூறியுள்ளார்.
இந்தப் பதிவுடன் கொடியேற்றிய பஞ்சாயத்துத் தலைவர்கள் விடியோவையும் பதிவிட்டுள்ளார்.
இவர் நடித்த அயோத்திக்கு தேசிய விருது கிடைக்காதது மிகுந்த விமர்சனத்துக்குள்ளானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.