விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் மறுவெளியீட்டில் சாதனை படைத்துள்ளது.
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர்கள் சிம்பு, த்ரிஷா நடித்த திரைப்படமான விண்ணைத்தாண்டி வருவாயா கடந்த 2010, பிப்.26 ஆம் தேதி வெளியானதிலிருந்து இன்றுவரை பேசப்பட்டுக்கொண்டே இருக்கிறது.
காரணம், இணைசேராத காதலர்களின் கதையாக உருவான இப்படம் வெளியானபோது ஏ. ஆர். ரஹ்மானின் பாடல்களுக்காவும் காட்சியமைப்புகளுக்காகவும் ரசிகர்களை ஈர்த்தது.
இந்த நிலையில், 4 ஆண்டுகளுக்கும் முன் சென்னை பிவிஆர் திரையரங்கில் மறுவெளியீடான இப்படம் இதுவரை 1300 நாள்களைக் கடந்து சாதனையைப் படைத்துள்ளது. இதுவே, மறுவெளியீட்டில் இவ்வளவு நாள்களைக் கடந்த முதல் இந்திய சினிமா ஆகும்.
முக்கியமாக, மறுவெளியீடு செய்யப்பட்ட நாளிலிருந்து ஒரு நாளுக்கு ஒருகாட்சி என்கிற அளவில் தொடர்ந்து திரையிடப்பட்டதுடன் அதற்கு காதலர்களிடம் இன்றுவரை வரவேற்பும் கிடைத்திருப்பதும் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிக்க: யார் இந்த ரச்சிதா ராம்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.