அரசியலில் களமிறங்கும் சூர்யா? நற்பணி இயக்கம் மறுப்பு!

அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கம் கூறியதாவது...
Actor Suriya in a retro film poster.
ரெட்ரோ பட போஸ்டரில் நடிகர் சூர்யா. படம்: எக்ஸ் / சூர்யா
Published on
Updated on
1 min read

நடிகர் சூர்யா குறித்து பரவும் அவதூறுகளுக்கு அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு தேர்தல் வரவிருக்கும் நிலையில் சூர்யாவும் களமிறங்குவதாகவும் இதற்காக பிரசாரத்தில் ஈடுபடுவாரெனவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், இது குறித்து அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

சூர்யாவின் கோட்பாடுகளுக்கு முரணான பொய்யான செய்தி

ஊடக நண்பகர்களுக்கும், சமூக வலைத்தள நண்பர்கள், சகோதர, சகோதரிகளுக்கும் அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கம் சார்பில் வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கடந்த சில நாள்களாக அண்ணன் சூர்யா அவர்கள் பற்றி சில பொய்யான தகவல்கள் இணைய ஊடகங்களில் பரவி வருகின்றன. வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அண்ணன் சூர்யா அவர்கள் களமிறங்கப் போகிறார் என்று சமூக வலைத்தளங்களை மையமாக வைத்து இந்தப் பொய்யான செய்தி பரப்பப்பட்டு வருகிறது.

இந்தச் செய்தி உண்மைக்கு மாறான போலியான தகவல் என்பது மட்டுமல்ல, அண்ணன் சூர்யாவின் கோட்பாடுகளுக்கு முரணானது.

நிறைவாக வாழும் சூர்யா

கலை உலகப் பயணமும், அகரமும் இப்போதைய அவர் வாழ்வுக்கு போதுமான நிறைவைத் தந்துள்ளது.

சமீபத்தில் நடந்த அகரம் நிகழ்வு தமிழ்நாடு மட்டுமின்றி உலகு தழுவிய அளவில் கவனம் ஈர்க்கப்பட காரணமானவர்களாகிய உங்களுக்கு எங்கள் மகிழ்ச்சி கலந்த நன்றிகள்.

அண்ணன் சூர்யாவை நேசிக்கும் கோடிக்கணக்கான தம்பி, தங்கைகள், நண்பர்களின் வாழ்த்துக்களோடு சினிமாவில் மட்டுமே அண்ணனின் கவனம் இருக்கும்.

எங்கள் அண்ணன் சூர்யா அவர்கள் பற்றி வெளியான போலியான இந்தச் செய்தியைத் திட்டவட்டமாக மறுக்கிறோம். நன்றி எனக் கூறப்பட்டுள்ளது.

சூர்யா நடித்து கடைசியாக வெளியான ரெட்ரோ கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தற்போது கறுப்பு படத்தில் நடித்து முடித்துள்ளார்.

Summary

The All India Surya Charitable Foundation has issued a statement regarding the defamation allegations being spread about actor Surya.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com