
நடிகர் கார்த்தியின் ”மார்ஷல்” திரைப்படத்தில் அவருக்கு வில்லனாக நடிகர் ஆதி பினிசெட்டி நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகரும், இயக்குநருமான தமிழ்-ன் இயக்கத்தில், நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் “மார்ஷல்”. நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன், நடிகர்கள் சத்யராஜ், பிரபு, லால், ஜான் கொக்கென் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் புதுமையான போஸ்டர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி, ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ராமநாதபுரத்தைச் சேர்ந்த கப்பல் ஓட்டும் கேங்ஸ்டர்களின் கதை என்று கூறப்படும், இந்தப் புதிய படத்தின் வில்லனாக நடிகர் ஆதி பினிசெட்டி நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, இந்தப் படம் இரு பாகங்களாக வெளியாகும் என சினிமா வட்டாரங்களில் பேசப்படும் நிலையில், வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க படக்குழுவினர் முதலில் நடிகர் நிவின் பாலியை அனுகியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஒரே நாளில் வெளியாகும் 2 படங்கள்..! தனக்குத்தானே போட்டியாக மாறிய பிரதீப்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.