விஷ்ணு விஷாலின் ஆர்யன் ரிலீஸ் அப்டேட்!

நடிகர் விஷ்ணு விஷாலின் ஆர்யன் படம் குறித்து...
Vishnu Vishal starring Aryan Film Posters.
ஆர்யன் பட போஸ்டர்கள். படங்கள்: எக்ஸ் / விஷ்ணு விஷால்.
Published on
Updated on
1 min read

நடிகர் விஷ்ணு விஷாலின் ஆர்யன் திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

ராட்சசன் படத்திற்குப் பிறகு மீண்டும் காவல்துறை அதிகாரியாக இந்தப் படத்தில் நடித்துள்ளார்.

தமிழின் முன்னணி நடிகரான விஷ்ணு விஷால் கட்டா குஸ்தி திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் லால் சலாம் படத்தில் நடித்திருந்தார். அப்படம் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை.

தொடர்ந்து, நீண்ட நாள்களாக படப்பிடிப்பில் இருக்கும் மோகன்தாஸ் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதுவும் தாமதமாகி வருகிறது.

தற்போது, ராட்சசன் இயக்குநர் ராம்குமார் இயக்கத்திலும் ஆர்யன் படத்திலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரியில் முடிவடைந்தது. பிரவீன் இயக்கும் இப்படத்தில் காவல்துறை அதிகாரியாக விஷ்ணு விஷால் நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், செல்வராகவன் நடித்துள்ளார்கள். சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.

கிரைம் திரில்லர் பாணியில் உருவாகிவரும் இப்படம் வரும் அக்டோபரில் வெளியாகுமென தகவல் வெளியாகியுள்ளது.

வெளியாகும் முன்பே இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

Summary

It has been announced that actor Vishnu Vishal's film Aryan will be released in October.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com