கடவுளை முட்டாளாக்க முடியாது! ரவி மோகனைச் சாடும் ஆர்த்தி?

ஆர்த்தி ரவியின் இன்ஸ்டாகிராம் பதிவு குறித்து....
கடவுளை முட்டாளாக்க முடியாது! ரவி மோகனைச் சாடும் ஆர்த்தி?
Published on
Updated on
1 min read

ஆர்த்தி ரவியின் இன்ஸ்டாகிராம் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் ரவி மோகன் இன்று ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தைத் துவங்கியுள்ளார். இதற்கான அறிமுக விழா சென்னையில் நடைபெற்று வருகிறது.

நிகழ்வில், ரவி மோகனின் தோழி கெனிஷா, நடிகர்கள் கார்த்தி, சிவகார்த்திகேயன், சிவராஜ் குமார், எஸ்ஜே சூர்யா, பிரபல இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.

ரவி மோகனும், கெனிஷாவும் இன்று சென்னை வருவதற்கு முன் தயாரிப்பு நிறுவனம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இருவரும் திருப்பதி சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

இந்த நிலையில், இவர்கள் திருப்பதிக்குச் சென்ற புகைப்படங்கள் நேற்று (ஆக.25) சமூக வலைதளங்களில் வெளியான சில மணி நேரங்கள் கழித்து, ரவி மோகனின் முன்னாள் மனைவி ஆர்த்தி இன்ஸ்டாகிராமில் விடியோ ஒன்றைப் பகிர்ந்து, “நீங்கள் பிறரை முட்டாளாக்கலாம். உங்களையே நீங்கள் முட்டாளாக்கிக் கொள்ளலாம். ஆனால், நீங்கள் கடவுளை முட்டாளாக்க முடியாது.” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இப்பதிவு ரசிகர்களிடம் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சில மாதங்களுக்கு முன் ரவி மோகனும், ஆர்த்தியும் ஒருவரை ஒருவர் தாக்கி அறிக்கை வெளியிட்டு வந்ததற்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

ravi mohan's ex wife aarti ravi new instagram post get viral

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com