
நடிகை வனிதா விஜயகுமார் நீண்ட நாள்களுக்குப் பிறகு மீண்டும் சின்ன திரையில் நடிக்கவுள்ளார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிறபகல் 2 மணிக்கு இதயம் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடரில் பல்லவி கெளடா நாயகியாக நடிக்கிறார்.
காதல் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வந்த இந்தத் தொடரின் முதல் பாகத்தில், ஜனனி அசோக் குமார் நாயகியாக நடித்து வந்தார். அவருக்கு ஜோடியாக ரிச்சர்ட் ஜோஷ் நடித்தார்.
தவிர்க்க முடியாத காரணத்தினால் ஜனனி அசோக் குமார் இதயம் தொடரில் இருந்து விலகியதால், அத்தொடரை முடித்துவிட்டு, இதயம் -2 ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதில், ஜனனி அசோக் குமாருக்கு பதிலாக பல்லவி நாயகியாக நடித்து வருகிறார்.
இதனிடையே இத்தொடரின் கதைகளத்தை மேலும் வலுப்படுத்துவதற்காக வனிதா விஜயகுமாரை சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவைக்கவுள்ளனர்.
இதனால், பல திருப்பங்கள் இதயம் தொடரில் உருவாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இது தொடர்பான முன்னோட்ட விடியோவும் வெளியாகியுள்ளது. இதில், சரோஜா என்ற பாத்திரத்தில் வனிதா விஜயகுமார் நடிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு, சின்ன பாப்பா பெரிய பாப்பா, சந்திரலேகா, திருமதி ஹிட்லர், புதுப்புது அர்த்தங்கள், மாரி உள்ளிட்டத் தொடர்களில் வனிதா விஜயகுமார் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | என் காதலன் எனக் கூறினால் ஏமாற வேண்டாம்: சின்ன மருமகள் நடிகை வேண்டுகோள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.