கடலுக்கு அடியில் வெளியிடப்பட்ட திரௌபதி - 2 முதல் பார்வை!

திரௌபதி - 2 திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டது குறித்து...
படத்தின் போஸ்டர்...
படத்தின் போஸ்டர்...
Published on
Updated on
1 min read

இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகும், திரௌபதி - 2 திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழுவினர் கடலுக்கு அடியில் வெளியிட்டுள்ளனர்.

இயக்குநர் மோகன் ஜி மற்றும் நடிகர் ரிச்சர்ட் ரிஷி ஆகியோரது கூட்டணியில் உருவாகி, கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் பேசுபொருளான திரைப்படம், “திரௌபதி”.

இந்தத் திரைப்படத்தின், 2-வது பாகமான ”திரௌபதி - 2”, நேதாஜி ப்ரொடக்‌ஷன்ஸ் மற்றும் ஜி.எம். பிலிம் கார்பரேஷன் தயாரிப்பில், வரலாற்று கதைகளத்துடன் கூடிய படமாக உருவாகியுள்ளது.

இந்நிலையில், இந்தத் திரைப்படத்தின் முதல்பார்வை போஸ்டரை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு படக்குழுவினர், இன்று (ஆக.27) கடலுக்கு அடியில் வெளியிட்டுள்ளனர். அதன், விடியோ பதிவானது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து, அந்தப் பதிவில் இயக்குநர் மோகன் ஜி கூறியிருப்பதாவது:

“மீண்டும் திரெளபதியின் மிரட்டல் ஆரம்பம். தென்னகத்தை ஆண்ட ஹொய்சாள பேரரசன் மூன்றாம் வீர வல்லாளர் மற்றும் சேந்தமங்கலத்தை ஆண்ட காடவராயர்களின் வீரம், தியாகம், ஆகியவற்றுடன் வலி நிறைந்த இரத்த சரித்திரம்” எனக் கூறியுள்ளார்.

இத்துடன், நடிகர்கள் நட்டி நாகராஜ், வொய்.ஜி. மகேந்திரன் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: நடிகரானார் டூரிஸ்ட் ஃபேமலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்!

Summary

The first look poster of the film Draupadi - 2, directed by Mohan G, has been released by the film crew under the sea.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com