நடிகர் சத்யராஜ் சிவாஜி திரைப்படத்தில் நடிக்காதது குறித்து பேசியுள்ளார்.
நடிகர் சத்யராஜ் இறுதியாக நடித்த கூலி திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வணிக ரீதியாக வெற்றிப்படமானது.
இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த்துடன் இணைந்து நடித்திருந்தார். கிட்டத்தட்ட 39 ஆண்டுகளுக்குப் பின் இருவரும் சேர்ந்து நடித்தனர்.
ஆனால், கூலி திரைப்படத்திற்கு முன்பே இயக்குநர் ஷங்கர் சிவாஜி திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க சத்யராஜிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், சில காரணங்களால் சத்யராஜ் நடிக்கவில்லை.
ரஜினி மீதான சத்யராஜின் கருத்து மற்றும் அரசியல் வேறுபாடே இதற்குக் காரணம் என சொல்லப்பட்டது.
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய சத்யராஜ், “சிவாஜி திரைப்படத்தின்போது நான் மார்க்கெட் இழந்த நடிகராக இருந்தேன். நாயகனாக நடித்த படம் ஓடாதா என்றும், மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்கிற முனைப்பிலும் இருந்தேன். அப்போதுதான், சிவாஜி பட வாய்ப்பு வந்தது. நான் ஷங்கரிடம் நிலைமைச் சொல்லி வில்லனாக நடித்தால் மீண்டும் மார்க்கெட் போகும் என்றேன். இதுதான் நடந்தது. ஆனால், நிறைய பேர் வேறு மாதிரி எழுதினர்.” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: வியக்க வைக்கும் விஎஃப்எக்ஸ்... மிராய் டிரைலர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.