
நடிகர் விஷால் தனக்கு சாய் தன்ஷிகாவுடன் நிச்சயதார்த்தம் நடந்ததாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நீண்ட நாள்களாக காதலித்து வந்த இவர்கள் விரைவில் திருமணம் செய்யவிருக்கிறார்கள்.
சமூபத்தில் ’யோகி டா’ பட விழாவில் விஷாலும் தானும் காதலித்து வருவதாகவும், பெற்றோர் சம்மதத்துடன் ஆக. 29-ல் திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக சாய் தன்ஷிகா கூறியிருந்தார்.
நடிகர் சங்க தலைவரான விஷால், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டடத்தைக் கட்டி முடித்த பிறகே திருமணம் என அறிவித்திருந்தார்.
அவர் அறிவித்து 9 ஆண்டுகள் ஆன நிலையில், நடிகர் சங்க கட்டடப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. விரைவில் தேதி நடிகர் சங்கக் கட்டடம் திறக்கப்படவுள்ளது. அதில்தான் அவர்களது திருமணம் நடைபெற இருக்கிறது.
இந்நிலையில், தனது எக்ஸ் பக்கத்தில் நிச்சயதார்த்த புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார்.
என்னுடைய பிறந்தநாளில் பிரபஞ்சத்தின் மூலை முடுக்கிலிருந்து எல்லாம் என்னை வாழ்த்திய அனைவருக்கும் என் நன்றிகள்.
எங்கள் குடும்பத்தினர் முன்னிலையில், இன்று எனது நிச்சயதார்த்தம் சாய் தன்ஷிகாவுடன் நடைபெற்றதை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். மிகவும் பாசிட்டிவாகவும் (நேர்மறையாகவும்) ஆசிர்வதிக்கப்பட்டதாகவும் உணர்கிறேன்.
எப்போதும் போல உங்களது ஆசிர்வாதங்களை எதிர்பார்க்கிறேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.