
வ்டசென்னை 2 படம் குறித்த அறிவிப்பை இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் தயாரிப்பு மற்றும் நடிப்பில் 2018 ஆம் ஆண்டில் வெளியான வடசென்னை, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகமான வடசென்னை 2 - அன்புவின் எழுச்சிக்காக ரசிகர்கள் நீண்டகாலமாகவே காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில், வடசென்னை 2 படத்தின் அறிவிப்பு குறித்து வெற்றிமாறன் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
எனது அடுத்த படத்தின் அப்டேட் இன்னும் 10 முதல் 15 நாள்களில் வெளியாகும். அது முடிந்ததும் வடசென்னை 2 படம் தொடங்கப்படும் என்று தெரிவித்தார்.
நடிகர் சூர்யாவுடனான வாடிவாசல் படம் தள்ளிக்கொண்டே போகும்நிலையில், நடிகர் சிம்புவின் 49 ஆவது படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார். இந்தப் படமும் கைவிடப்பட்டதாக சமீபத்தில் சமூக ஊடகங்களில் வதந்தி பரவிய நிலையில், வெற்றிமாறனின் அறிவிப்பு வெளியாகவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.