நடிகர் தனுஷின் தேரே இஷ்க் மே திரைப்படத்தின் வசூல் அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் தனுஷ், க்ரித்தி சனோன் நடிப்பில் உருவான தேரே இஷ்க் மே திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகி ஹிந்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதனால், இப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவுகளும் அதிகரித்து வருகின்றன. தமிழிலும் பலருக்கு இப்படம் பிடித்திருந்தது. ஆனால், சரியான புரோமோஷன் இல்லாததால் தமிழில் அதிக திரைகளில் வெளியாகவில்லை.
ஆனாலும், இப்படம் வெளியான மூன்று நாள்களில் ஹிந்தியில் மட்டும் ரூ. 50.95 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் உள்பட பிற மொழி வசூலைக் கணக்கிட்டால் ரூ. 60 கோடியைக் கடந்திருக்கலாம்.
நடிகர் தனுஷின் தமிழ்ப்படமான இட்லி கடையும் ஓரளவு வணிகம் செய்திருந்தது. தெலுங்கில் நடித்த குபேரா ரூ. 100 கோடியைக் கடந்தது. தற்போது, ஹிந்தியிலும் ரூ. 100 கோடியை வசூலிப்பார் என்றே தெரிகிறது. ஒரே ஆண்டில் மூன்று வெவ்வேறு மொழிகளில் அசத்தியிருக்கிறார் தனுஷ்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.