ஜெயிலர் - 2 திரைப்படத்தில் விநாயகன்!

நடிகர் விநாயகன் ஜெயிலர் - 2 படத்தில் நடிக்கவுள்ளார்...
நடிகர் விநாயகன்
நடிகர் விநாயகன்
Updated on
1 min read

ஜெயிலர் - 2 திரைப்படத்தில் இணையவுள்ளதாக நடிகர் விநாயகன் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் நெல்சன் - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணியில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான படம் ஜெயிலர். இந்தத் திரைப்படம் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றியடைந்த நிலையில் 2 ஆம் பாகத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

இசையமைப்பாளர் அனிருத் இசையில் உருவாகும் இந்தப் படத்தில், நடிகைகள் ரம்யா கிருஷ்ணன், மிர்ணா ஆகியோர் நடித்து வருகின்றனர். மேலும், ஷாருக்கான், மோகன்லால், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் இணையவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஜெயிலர் - 2 திரைப்படத்தில் தான் நடிக்கவுள்ளதாக நடிகர் விநாயகன் தெரிவித்துள்ளார். ஆனால், அது பிளாஷ்பேக் காட்சியிலா இல்லை நிகழ்காலக் காட்சியிலா எனத் தெரியாது எனக் கூறியுள்ளார்.

ஜெயிலர் - 2 படத்தில் இந்திய நட்சத்திரங்கள் இணைந்து வருவது எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது.

Summary

actor vinayakan is part of jailer 2 movie

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com