

23-ஆவது சென்னை திரைப்பட விழாவில் திரையிட 12 தமிழ்ப் படங்கள் தேர்வாகியுள்ளன.
இந்தத் திரைப்பட விழா வரும் டிச.11 முதல் 18ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
உலக சினிமாக்களையும் புதுமையான படங்களை தமிழ் மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியாக ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் திரைப்பட விழா நடத்தப்படுகிறது.
இந்திய திரைப்பட வளர்ச்சிக் கழகத்துடன் இணைந்து தமிழக அரசு இந்த விழாவினை நடத்தி வருகிறது.
இந்த விழாவில் இந்தமுறை 12 தமிழப் படங்கள் திரையிட தேர்வாகியுள்ளன.
3 பிஎச்கே, அலங்கு, பிடிமண், காதல் என்பது பொது உடைமை, மாமன், மாயக்கூத்து, மெட்ராஸ் மேட்னி, மருதம், ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ், பறந்து போ, டூரிஸ்ட் ஃபேமிலி, வேம்பு ஆகிய திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.