

மலையாள திரையுலகில் ’அவள்கொப்பம்’ - Avalkoppam (நாங்கள் அவளுடன் நிற்கிறோம்) என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
பிரபல மலையாள நடிகைக்கு, கடந்த 2017-இல் பாலியல் தொல்லை அளித்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் மலையாள நடிகர் திலீப் மற்றும் அவரது நண்பர் சரத் ஆகியோர் விடுதலை செய்யப்படுவதாக எர்ணாகுளம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நடிகையின் கார் ஓட்டுநர், உதவியாளர் பல்சர் சுனில் உள்பட 6 பேர் குற்றவாளிகள் என்றும் அந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மலையாளத்தில் உருவாக்கப்பட்ட டபிள்யூசிசி (வுமன் இன் சினிமா கலெக்டிவ்) இந்த வழக்கு குறித்து 2017-இல் உருவாக்கிய வார்த்தைதான் அவள்கொப்பம்.
தற்போது இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி திரைப்பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் சமூக வலைதளங்களில் பாதிகப்பட்ட நடிகைக்கு ஆதரவாக பதிவிட்டு வருகிறார்கள்.
இந்தத் தீர்ப்பு குறித்து பாதிக்கப்பட்ட நடிகை இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், நடிகை ரிமா கல்லிங்கல், பார்வதி திருவோத்து, ரம்யா நமீசன் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
டபிள்யூசிசி சார்பில் அறிக்கை ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
இது எளிதான பயணமாக இருந்திருக்காது. பாதிக்கப்பட்ட பெண்ணாக இருந்து, மீண்டு வருவது மிகவும் கடினமனது. நீதிக்காக 3,215 நாள்கள் காத்திருப்பு.
கேரளம், மலையாள சினிமா, திரைத்துறையில் இருக்கும் கொந்தளிப்பான பெண்களின் பயணத்தை இவரின் (பாதிக்கப்பட்ட நடிகை) போராட்டம் வெளிப்படுத்தியுள்ளது.
நமது ஒட்டுமொத்த ஆதரவுக் குரலின் மூலமாக தாக்கங்கள் ஏற்படுகின்றன. நீதித்துறையின் மீதான நம்பிக்கையும் அவரது போராட்டக் குணத்தை நாம் பாராட்ட வேண்டும்.
அவரது போராட்டம் பாதிக்கப்பட்ட அனைவருக்குமானது. நாங்கள் அவருடன் இருக்கிறோம். அவள்கொப்பம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.