ஒரே மேடையில் தோன்றிய 3 பிக் பாஸ் தொகுப்பாளர்கள்!

தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் தொகுப்பாளர்கள் ஒரே மேடையில் தோன்றியது குறித்து..
மோகன் லால், நாகர்ஜுனா, விஜய் சேதுபதி
மோகன் லால், நாகர்ஜுனா, விஜய் சேதுபதிபடம் - எக்ஸ்
Updated on
1 min read

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என மூன்று மொழிகளில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிகளின் தொகுப்பாளர்கள் ஒரே மேடையில் தோன்றினர்.

தமிழ் பிக் பாஸ் தொகுப்பாளர் விஜய் சேதுபதி, மலையாள பிக் பாஸ் தொகுப்பாளர் மோகன் லால், தெலுங்கு பிக் பாஸ் தொகுப்பாளர் நாகர்ஜுனா ஆகியோர் ஒரே மேடையில் தோன்றினர்.

சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில், செளத் அன்பவுண்ட் என்ற நிகழ்ச்சியை மிக பிரம்மாண்டமாக ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் நடத்தியது.

இந்த நிகழ்வில், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் சாமிநாதன், நடிகர் கமல்ஹாசன், மோகன் லால், நாகர்ஜுனா, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் தென்னிந்திய மொழிகளில் உருவாகவுள்ள இணையத் தொடர்களுக்காக தமிழக அரசுடன் இணைந்து ரூ.4000 கோடியை ஹாட்ஸ்டார் முதலீடு செய்யவுள்ளது.

இந்நிகழ்ச்சியில் ஒரே மேடையில் மோகன் லால், நாகர்ஜுனா, விஜய் சேதுபதி ஆகியோர் தோன்றினர். ஹியோ ஹாட்ஸ்டார் தளத்தில் பிக் பாஸ் ஒளிபரப்பாவதால், இவர்கள் மூவரும் ஒரே மேடையில் தோன்றி, பிக் பாஸ் குறித்து தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.

இதில் பேசிய விஜய் சேதுபதி, பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பதில்லை, இதனால் தொகுத்து வழங்க முதலில் தயக்கம் காட்டியதாகக் கூறினார். பிக் பாஸ் குறித்து மாறுபட்ட கருத்துகள் இருந்த நிலையில், அதில் உள்ள உளவியல் கூறுகளை அறிந்துகொண்ட பிறகு நிகழ்ச்சியை விரும்பி தொகுத்து வழங்கி வருவதாகவும் கூறினார்.

மனிதர்களை படிப்பதை விட, கவனிப்பதை விட சிறந்த பாடம் வேறு எங்கும் கிடைக்காது எனக் குறிப்பிட்ட விஜய் சேதுபதி, பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் ஒவ்வொருவரிடமும் தன்னைப் பார்க்க முடிவதாகக் கூறினார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி மனிதர்களின் நடத்தையில் பல்வேறு விதமான கேள்விகளை எழுப்புவதாகவும், பதில்களை விட கேள்விகளே அதிகம் கவருவதாகவும் குறிப்பிட்டார். வேறுபட்ட கண்ணோட்டங்களை திறந்து வைப்பதில் பிக் பாஸுக்கு முக்கியப் பங்கு உண்டு எனவும் குறிப்பிட்டார். இந்நிகழ்ச்சியில் விஜய் சேதுபதியின் பேச்சு பலரைக் கவர்ந்தது.

Summary

Bigg boss 9 tamil host vijay sethupathi nagarjuna mohan lal in same stage

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com