காதலருடனான புகைப்படங்களை நீக்கிய நிவேதா பெத்துராஜ்! திருமணம் நிறுத்தம்?

நிவேதா பெத்துராஜ் தன் திருமணத்தை நிறுத்தியதாகக் கூறப்படுகிறது...
nivetha pethuraj
நிவேதா பெத்துராஜ், ரஜ்ஹித் இப்ரான்
Updated on
1 min read

நடிகை நிவேதா பெத்துராஜ் தன் காதலரை நட்பு நீக்கம் செய்ததுடன் நிச்சயதார்த்த புகைப்படங்களையும் நீக்கியுள்ளார்.

மதுரையில் பிறந்தவரான நிவேதா பெத்துராஜ் சினிமா மற்றும் பேட்மிண்டன் விளையாட்டில் ஆர்வம் கொண்டவர். தமிழில், ‘ஒருநாள் கூத்து’ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானர் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினுடன் ‘பொதுவாக என் மனசு தங்கம்’ படத்தில் நடித்தார்.

பின், டிக் டிக் டிக், திமிரு பிடிச்சவன், சங்கத்தமிழன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது, தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.

சில மாதங்களுக்கு முன், நிவேதா பெத்துராஜ் தன் நீண்ட நாள் நண்பரான ரஜ்ஹித் இப்ரான் என்பவரைத் திருமணம் செய்யவுள்ளதாகத் தெரிவித்து அவருடனான புகைப்படங்களை வெளியிட்டார்.

இவர்களின் திருமணம் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ விரைவில் நடைபெற உள்ளதாகக் கூறப்பட்டது.

இந்த நிலையில், நிவேதா பெத்துராஜ் சமூக வலைதளங்களில் தன் காதலரை நட்பு நீக்கம் செய்ததுட அவருடனான புகைப்படங்களை நீக்கியுள்ளது இருவரும் திருமண முடிவைக் கைவிட்டதாகத் தெரிவதால் ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Summary

actor nivetha pethuraj deleted her engagement pictures

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com