இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகும் காதல் திரைப்படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ் கூட்டுத் தயாரிப்பில் இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் புதிய திரைப்படம் உருவாகிறது.
இந்த நிலையில், இப்படத்திற்கு 29 எனப் பெயரிட்ட டீசரை வெளியிட்டுள்ளனர். டீசர் காட்சிகளைப் பார்க்கும்போது 29 வயது ஆணின் வாழ்க்கையும், காதலுமாக இப்படத்தின் கதை இருக்கலாம் எனத் தெரிகிறது.
இப்படத்தின் நாயகனாக விது நடிக்க, நாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி நடிக்கிறார். நடிகர் விது ஜிகர்தண்டா - 2, ரெட்ரோ திரைப்படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானவர்.
இறுதியாக, ரத்னகுமார் குலு குலு திரைப்படத்தை இயக்கியிருந்தார். இதற்கிடையே, லியோ உள்ளிட்ட திரைப்படங்களுக்கு வசனம், திரைக்கதையும் எழுதினார்.
Summary
rathnakumar's new movie titled as 29
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









