லாக்டவுன் வெளியீட்டில் மீண்டும் மாற்றம்!

லாக்டவுன் வெளியீட்டில் மீண்டும் மாற்றம்!

லாக்டவுன் வெளியீட்டில் மாற்றம்...
Published on

அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் உருவான லாக்டவுன் திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

லைகா நிறுவனம் தயாரிப்பில் அனுபமா பரமேஸ்வரன் நடித்த ‘லாக் டவுன்’ திரைப்படத்தை ஏஆர் ஜீவா இயக்க, என்ஆர் ரகுநாதன் இசையமைத்துள்ளார்.

இதில், நடிகர்கள் சார்லி, நிரோஷா, மஹானா சஞ்சீவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

நீண்ட நாள்களாக வெளியீட்டிற்காகக் காத்திருந்த இப்படம் டிச. 5 ஆம் தேதி திரைக்கு வருமென அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு பின், டிச. 12 அன்று வெளியாகும் எனக் கூறப்பட்டது.

ஆனால், தற்போது மீண்டும் இப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால், தமிழ் சினிமாவின் மிகப்பெரிய நிறுவனமான லைகா அண்மைகால முதலீடு இழப்புகளால் இந்த நிலையில் இருக்கிறதே என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com