

பாலிவுட் நடிகை ஷஹானா கோஸ்வாமி தனது இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர் தனக்காக பகிர்ந்த ஓவியத்தைக் குறிப்பிட்டு நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.
ஷஹானா கோஸ்வாமி நடித்த, இந்தியாவில் எடுக்கப்பட்ட சந்தோஷ் என்ற படம் வெளிநாட்டு படத்துக்கான ஆஸ்கர் பிரிவில் தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாலிவுட்டில் 2006 முதல் நடித்துவரும் ஷஹானா கோஸ்வாமி தற்போது சந்தோஷ் படத்தின் மூலம் உலகப் புகழ்பெற்றுள்ளார்.
வட மாநிலங்களில் நடக்கும் சமூக ஏற்றத் தாழ்வுகளும் பெண்கள் அடக்குமுறையையும் பற்றி இந்தப் படம் மிகவும் எதார்த்தமான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது.
தனது ரசிகர் ஒருவர் உருவாக்கிய ஓவியத்துடன் தனது பெயரையும் இணைத்து இன்ஸ்டா பக்கத்தில் அவர் பதிவிட்டதாவது:
என்னுடைய பெயர் ஷஹானா. அது ஹிந்துஸ்தானியின் ஒரு கிளாசிக்கல் ராகத்தைச் சேர்ந்தது. அதற்கு அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும் அர்த்தம்.
நான் எப்போதும் என்னுள் அந்த அரச குடும்பத்தைச் சேர்ந்தவள் என்ற பகுதி சந்தேகத்துடனே இருக்கும். நகைச்சுவை, முட்டாள் மாதிரியான பகுதிகளே அதிகமிருக்கும்.
இந்த வாழ்க்கையில், நான் என்னுடைய சொந்த ஷஹானாவாக மாறியுள்ளேன். அதில் எனக்கென தனிப்பட்ட ராயல் தன்மையை அளித்துள்ளேன்.
இதுதான் நான் நம்பும் மிகப்பெரிய வாழ்க்கையின் குறியீடு என நினைக்கிறேன்.
நான் தற்போது எனக்கே உரிய ராணி ஆகிவிட்டேன். தொடக்கம், நடு, இறுதியில் இருக்கும் புகைப்படங்கள் எனது தீவிர ரசிகர் ஒருவரால் உருவாக்கப்பட்டதாகும். அதில் எனக்குள்ளிருக்கும் நிஜமான, உருவகமான ராணியை வெளிக்கொணர்ந்திருப்பார்.
இந்த அற்புதமான கலைப்படைப்புக்கு மிகுந்த நன்றி நண்பரே எனக் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.