

ஹார்ட் பீட் இணையத் தொடர் நடிகர்கள் நடிக்கும் புதிய இணையத் தொடர் உருவாகியுள்ளது.
மக்கள் மத்தியில் பிரபலமடைந்த ஹார் பீட் இணையத் தொடரில் நடித்து பிரபலமானவர்கள் பாடினி குமார், குரு லட்சுமணன். இவர்கள் ஹார்ட் பீட் தொடரில் இணைந்து நடித்து தங்களுக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினர்கள்.
இதனைத் தொடர்ந்து, நடிகர் குரு லட்சுமணன் ஆஃபீஸ் இணையத் தொடரில் நடித்திருந்தார். இந்தத் தொடரும் ரசிகர்கள் மத்தியில் வெற்றிப் பெற்றது.
தற்போது இவர் ஆஹா ஓடிடியில் ஒளிபரப்பாகி வரும் தூள் பேட் போலீஸ் ஸ்டேஷன் என்ற இணையத் தொடரில் நடித்து வருகிறார்.
அதேபோல், சின்ன திரையில் ஒளிபரப்பான நாயகி, திருமணம் தொடர்களில் நடித்து தனது நடிப்பு பயணத்தை தொடங்கியவர் பாடினி குமார். தொடர்ந்து இவர் தமிழ் சினிமாவில் டேக் டைவெர்ஷன், சீசா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் குரு லட்சுமணன் மற்றும் பாடினி குமார் ஆகியோர் இணைந்து புதிய இணையத் தொடரில் நடிக்கிறார்கள். இந்தத் தொடருக்கு ஹார்ட்ல பேட்டரி எனப் பெயரிடப்பட்டுள்ளது.
ஹார்ட்ல பேட்டரி இணையத் தொடரை சதாசிவம் செந்தில் ராஜன் எழுதி இயக்குகிறார். இந்த இணையத் தொடர் வரும் டிச. 16 ஆம் தேதி ஜீ5 ஓடிடியில் வெளியாகிறது.
இதையும் படிக்க: திரைப்படமாகும் உலக கேரம் சாம்பியன் வாழ்க்கை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.