இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் சுவாரசியமான படங்கள்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் சுவாரசியமான படங்கள்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் குறித்து...

ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள், இணையத் தொடர்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.

1. ஆரோமலே

இயக்குநர் சாரங் தியாகு இயக்கத்தில் நடிகர் கிஷன் தாஸ் மற்றும் யூடியூபர் ஹர்ஷத் கான் நடிப்பில் வெளியான நகைச்சுவைத் திரைப்படம் ’ஆரோமலே’.

‘ஆரோமலே’ திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வரும் நாளை(டிச. 12) வெளியாகிறது.

2. தீயவர் குலை நடுங்க 

தீயவர் குலை நடுங்க திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகவுள்ளது.

நடிகர் அர்ஜுன், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள தீயவர் குலை நடுங்க படத்தை இயக்குநர் தினேஷ் லட்சுமணன் இயக்கியுள்ளார்.

3. காந்தா

kaantha Film poster.
காந்தா படத்தின் போஸ்டர். படம்: எக்ஸ் / வேஃபேர் ஃபிலிம்ஸ்.

காந்தா திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது.

செல்வராஜ் செல்வமணி இயக்கத்தில் நடிகர்கள் துல்கர் சல்மான், சமுத்திரக்கனி, பாக்யஸ்ரீ போர்ஸ் ஆகியோரின் நடிப்பில் கடந்த நவ. 14 ஆம் தேதி காந்தா திரைப்படம் வெளியானது.

4. ஃபெமினிச்சி ஃபாத்திமா

திரைப்பட விழாவில பல விருதுகளை வென்ற மலையாள மொழிப்படமான ஃபெமினிச்சி ஃபாத்திமா திரைப்படத்தை மனோரமா மேக்ஸ் ஓடிடி தளத்தில் நாளை பார்க்கலாம்.

இந்தப் படத்தில் ஷாமலா ஹம்சா, முஸ்தஃபா சர்கம், குமார் சுனில் ஆகியோர் பிரதான பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

5. ஹார்ட்ல பேட்டரி

குரு லட்சுமணன் மற்றும் பாடினி குமார் ஆகியோர் இணைந்து, ஹார்ட்ல பேட்டரி இணையத் தொடரில் நடிக்கிறார்கள்.

ஹார்ட்ல பேட்டரி இணையத் தொடரை சதாசிவம் செந்தில் ராஜன் எழுதி இயக்குகிறார். இந்த இணையத் தொடர் வரும் டிச. 16 ஆம் தேதி ஜீ5 ஓடிடியில் வெளியாகிறது.

6. கடந்த வார ஓடிடி (தி கேர்ள்ஃபிரண்ட்)

ரஷ்மிகா மந்தனா பிரதான பாத்திரத்தில் நடித்துள்ள தி கேர்ள்ஃபிரண்ட் படத்தை, நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் காணலாம்.

7. டைஸ் ஐரே 

நடிகர் மோகன்லால் மகன் பிரணவ் நடித்துள்ள டைஸ் ஐரே திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் காணக் கிடைக்கிறது.

ஆன்மாக்களுக்கு வழங்கப்படும் இறுதித் தீர்ப்பு என்பதே லத்தீன் மொழியில் டைஸ் ஐரே எனப்படுகிறது. அமானுஷ்ய திரைக்கதையுடன் ஹாரர் பாணியில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

8. குற்றம் புரிந்தவன்

நடிகர் பசுபதி பிரதான பாத்திரத்தில் நடித்துள்ள குற்றம் புரிந்தவன் இணையத் தொடரில், லட்சுமி பிரியா, விதார்த் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

செல்வமணி எழுதி இயக்கியுள்ள இந்த இணையத் தொடரை சோனி லைவ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.

9. ஸ்டீஃபன்

சீரியல் கில்லர் பாணியில் எடுக்கப்பட்டுள்ள ஸ்டீஃபன் திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

மிதுன் இயக்கி இருக்கும் இந்தத் திரைப்படத்தில், மைக்கேல் தங்கதுரை, ஸ்மிருதி வெங்கட், கோமதி சங்கர், விஜய்ஸ்ரீ உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

10. தூள் பேட் போலீஸ் ஸ்டேஷன் 

ஜஸ்வினி இயக்கத்தில் நடிகர்கள் அஸ்வின், குரு லக்ஷ்மண் ஆகியோர் பிரதான பாத்திரத்தில் நடித்துள்ள இணையத் தொடர் தூள் பேட் போலீஸ் ஸ்டேஷன்.

தூள்பேட் பகுதியில் நடைபெறும் சம்பவத்தை மையப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடர் ஆஹா ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது. ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு அடுத்தடுத்த எபிசோடுகள் வெளியாகிறது.

11. தி கிரேட் ப்ரீ-வெட்டிங் ஷோ

ராகுல் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் திருவீர் நடிப்பில் வெளியான படம் `The Great Pre-Wedding Show'.

திருமணத்திற்கு முன் எடுக்கப்படும் ப்ரீ வெட்டிங் போட்டோஷூட்டை மையப்படுத்தி நகைச்சுவை பாணியில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை ஜீ5 ஓடிடி தளத்தில் காணலாம்.

இதையும் படிக்க: கொம்புசீவி டிரைலர்!

Summary

Let's see which films and web series are releasing on OTT platforms this week.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com