

நடிகர் சிவகார்த்திகேயனின் “பராசக்தி” திரைப்படத்தின் புதிய பாடலின் புரோமோ வெளியாகியுள்ளது.
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்துள்ள 25 ஆவது திரைப்படம் “பராசக்தி”.
1960-களில் மெட்ராஸ் மாகாணத்தில் நடைபெற்ற மொழிப்போர் குறித்த கதைகளத்துடன் உருவாகி வரும் இந்தப் புதிய படத்தில், நடிகர்கள் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷின் இசையில் உருவாகும் 100 ஆவது திரைப்படமான பராசக்தி படத்தின் "அடியே அலையே” மற்றும் “ரத்னமாலா” ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன.
இந்த நிலையில், பராசக்தி படத்தின் 3 ஆவது பாடலான “நமக்கான காலம்” வரும் டிச.14 ஆம் தேதி வெளியாகும் என புரோமோ வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.
இதையும் படிக்க: ஹாலிவுட்டில் களமிறங்கும் வித்யூத் ஜம்வால்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.