

ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான துரந்தர் படத்தினை திரையிட வளைகுடா நாடுகள் தடை விதித்துள்ளன.
இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் உருவான துரந்தர் திரைப்படம் கடந்த டிச.5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
துரந்தர் படத்துக்கு தடை
வலதுசாரி சிந்தனைக் கொண்ட ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுவரும் துரந்தர் இந்தியாவில் மட்டுமே ரூ.218 கோடியை தாண்டியதாகப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தப் படம் இந்து - முஸ்லிம் பிரிவினையைத் தூண்டுவதாக இருப்பதாகவும் சிலர் விமர்சித்து வந்தனர்.
நடிகர் ஹிருதிக் ரோஷனின் அரசியலைத் தவிர்த்து நல்ல படம் என்ற கருத்தும் விமர்சனத்துக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், வளைகுடாவில் 6 நாடுகளில் துரந்தர் படத்தினை திரையிட தடை விதிக்கப்பட்டுள்ளன.
தடைக்கு என்ன காரணம்? இது முதல்முறை அல்ல!
பாகிஸ்தானுக்கு எதிரான கருத்துகள் இருப்பதால் தடைசெய்யப்பட்டதா என்ற தெளிவான விளக்கம் இதுவரை வெளியாகத நிலையில், அங்கு ஏற்கெனவே பல இந்திய திரைப்படங்கள் தடைசெய்யப்பட்டுள்ளதும் கவனித்தக்கது.
ஃபைட்டர், ஸ்கை போர்ஸ், தி டிப்ளோமேட், ஆர்டிகள் 370, டைகர் 3, தி காஷ்மீர் ஃபைல்ஸ் ஆகிய திரைப்படங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன.
இயக்குநர் ஆதித்யா தார் இயக்கிய தி காஷ்மீர் ஃபைல்ஸ், ஆர்டிகள் 370 திரைப்படமும் இதில் அடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.