நீலாம்பரியாக செருப்பைக் காட்டிய சான்ட்ரா! படையப்பாவாக பதிலடி கொடுத்த கானா வினோத்!

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் விஜே பார்வதியுடன் சான்ட்ரா, கானா வினோத் பேசும் விடியோ பலரால் பகிரப்பட்டு வருகிறது.
சான்ட்ரா, விஜே பார்வதி, கானா வினோத்
சான்ட்ரா, விஜே பார்வதி, கானா வினோத்படம் - எக்ஸ்
Updated on
1 min read

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் விஜே பார்வதியுடன் சான்ட்ரா, கானா வினோத் பேசும் விடியோ பலரால் பகிரப்பட்டு வருகிறது.

இதில், கானா வினோத் பேசிக்கொண்டிருக்கும்போது அவரை புறக்கணிக்கும் விதமாக சான்ட்ரா தனது காலை உயர்த்தி செருப்புகளை காண்பிக்கிறார்.

இதனைப் புரிந்துகொண்ட வினோத், சான்ட்ராவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஜினிகாந்த் போன்று தன் கால் மீது காலைப்போட்டு பேசினார். இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 11 வது வாரத்தை எட்டியுள்ளது. இந்த வாரத்திற்கான கேப்டனாக கானா வினோத் தேர்வாகியுள்ளார்.

பிக் பாஸ் வீட்டின் இந்த வார கேப்டனாக பொறுப்பேற்றதிலிருந்து பல அதிரடி மாற்றங்களை கானா வினோத் செய்து வருகிறார். இதேபோன்று போட்டியாளர்களிடமும் அவர்களுக்குத் தேவையானதை கேட்டறிந்து அதற்கு தீர்வு காண்கிறார்.

கடந்த சில வாரங்களாகவே நடிகை சான்ட்ரா, திவ்யா கணேசனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார். இருவரிடையேயும் தற்போது பேச்சுவார்த்தை இல்லை. இன்று காலை அமித் பார்கவ் உடன் அமர்ந்து பேசும்போது கூட, திவ்யா துரோகம் செய்துவிட்டதாகவும், அதனால் அவரிடமிருந்து விலகியிருப்பதாகவும் கூறினார்.

இந்நிலையில், சான்ட்ரா - திவ்யா பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியில் கானா வினோத் ஈடுபட்டார். இதன் ஒரு பகுதியாக திவ்யாவிடம் சென்று மனம்விட்டு பேசுமாறு சான்ட்ராவை நோக்கி வினோத் கூறினார்.

பிக் பாஸ் வீட்டில் மற்ற போட்டியாளர்களிடமிருந்து நீங்கள் தனித்து இருப்பது உங்கள் தனிப்பட்ட ஆட்டத்தை பாதிக்கும் என்றும், கண்ணீரை கேடயமாக்கிக்கொண்டு நீண்ட நாள்கள் தொடர முடியாது எனவும் கூறினார்.

ஆனால், இதனை பொருட்படுத்தாமல் புறக்கணிக்கும் வகையில் பதில் அளித்துவந்த சான்ட்ரா, ஒருகட்டத்திற்கு மேல் கால்களை உயர்த்தி வினோத்தை நோக்கி செருப்புகளை காண்பிக்கிறார். பிரச்னைகளை தீர்க்க வந்தவருக்கு ஏற்படும் அவமானத்தை உணர்ந்த வினோத், தனது கால் மீது கால் போட்டு தனக்கே உரித்தான தோரணையில், உடல்மொழியில் பதிலடி கொடுத்தார்.

இதனை ரசிகர்கள் பலர் நீலாம்பரி - படையப்பாவாக சித்திரித்து பகிர்ந்து வருகின்றனர். நீலாம்பரி செருப்பைக் காட்டி அமர்ந்திருப்பதாகவும், படையப்பா கால் மீது கால் போட்டு அமர்ந்து பதிலடி கொடுத்ததாகவும் ரசிகர்கள் இந்த விடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

இதையும் படிக்க | பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறும் நபர்கள் யார்?

Summary

bigg boss 9 tamil sandra gana vinoth viral video

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com