இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் ஹிட் படங்கள்!

இந்த வார ஓடிடி வெளியீடு தொடர்பாக...
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் ஹிட் படங்கள்!

ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள், இணையத் தொடர்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.

1. உன் பார்வையில்

உன் பார்வையில் படத்தின் போஸ்டர்
உன் பார்வையில் படத்தின் போஸ்டர்

நடிகை பார்வதி நாயர் பிரதான பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் உன் பார்வையில். இந்தப் படத்தில் கணேஷ் வெங்கட்ராம், மகேந்திரன், நிழல்கள் ரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

உன் பார்வையில் திரைப்படம் நாளை(டிச. 19) சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது.

2. தம்மா 

Rashmika Mandanna in the movie Thamma.
தம்மா படத்தில் ரஷ்மிகா மந்தனா. படங்கள்: யூடியூப் / யுனிவர்சல் மியூசிக் இந்தியா.

தம்மா படத்தில் நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா நாயகனாகவும் ரஷ்மிகா மந்தனா நாயகியாகவும் நடித்துள்ளார்கள்.

நகைச்சுவை கலந்த சஸ்பென்ஸ் திரில்லர் பாணியில் எடுக்கப்பட்டுள்ள இப்படம், அமேசான் பிரைம் ஓடிடியில் காணக் கிடைக்கிறது.

3. ஹார்டிலே பேட்டரி 

ஹார்டிலே  பேட்டரி இணையத் தொடர் போஸ்டர்.
ஹார்டிலே பேட்டரி இணையத் தொடர் போஸ்டர்.

குரு லட்சுமணன் மற்றும் பாடினி குமார் ஆகியோர் இணைந்து நடித்துள்ள இணையத் தொடர் ஹார்டிலே பேட்டரி.

ஹார்டிலே பேட்டரி இணையத் தொடரை சதாசிவம் செந்தில் ராஜன் எழுதி இயக்குகிறார். இந்த இணையத் தொடரை ஜீ5 ஓடிடி தளத்தில் காணலாம்.

4. பார்மா

நிவின் பாலி நடித்துள்ள பார்மா என்ற இணையத் தொடர், ஹாட்ஸ்டார் ஓடிடியில் நாளை வெளியாகிறது.

இது மருந்து நிறுவனங்களில் நடக்கும் மோசடிகளை மையமாக வைத்து திரில்லர் பாணியில் உருவாகியுள்ளது.

5. பிரேமன்டே

நவநீத் ஸ்ரீராம் இயக்கத்தில் வெளியான தெலுங்கு மொழிப்படமான பிரேமன்டே திரைப்படம் தமிழ், கன்னடம், மலையாளம் மொழிகளில் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது.

6. டோமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்

மம்மூட்டி - கௌதம் மேனன் கூட்டணியில் வெளியான 'டோமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்’ படம் நாளை ஜீ5 ஓடிடியில் வெளியாகிறது.

மேலும் இந்தப் படத்தில் கோகுல் சுரேஷ், சுஸ்மிதா பட், விஜி வெங்கடேஷ், வினீத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

7. மிஸஸ் தேஷ்பாண்டே

அம்மா மற்றும் மகன் இடையிலான உறவை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள மிஸஸ் தேஷ்பாண்டே இணையத் தொடர் ஜியோ ஹாட்ஸ்டாரில் நாளை வெளியாகிறது.

இந்த இணையத் தொடரை நாகேஷ் குகுனூர் இயக்கியுள்ளார். மாதுரி தீக்‌ஷித் பிரதான பாத்திரத்தில் நடித்துள்ளார்

8. கடந்த வார ஓடிடி (ஆரோமலே)

இயக்குநர் சாரங் தியாகு இயக்கத்தில் நடிகர் கிஷன் தாஸ் மற்றும் யூடியூபர் ஹர்ஷத் கான் நடிப்பில் வெளியான நகைச்சுவைத் திரைப்படம் ’ஆரோமலே’.

‘ஆரோமலே’ திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

9. தீயவர் குலை நடுங்க

தீயவர் குலை நடுங்க திரைப்படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் காணலாம்.

நடிகர் அர்ஜுன், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள தீயவர் குலை நடுங்க படத்தை இயக்குநர் தினேஷ் லட்சுமணன் இயக்கியுள்ளார்.

10. காந்தா

காந்தா திரைப்படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.

செல்வராஜ் செல்வமணி இயக்கத்தில் நடிகர்கள் துல்கர் சல்மான், சமுத்திரக்கனி, பாக்யஸ்ரீ போர்ஸ் ஆகியோரின் நடிப்பில் கடந்த நவ. 14 ஆம் தேதி காந்தா திரைப்படம் வெளியானது.

11. ஃபெமினிச்சி ஃபாத்திமா

திரைப்பட விழாவில பல விருதுகளை வென்ற மலையாள மொழிப்படமான ஃபெமினிச்சி ஃபாத்திமா திரைப்படத்தை மனோரமா மேக்ஸ் ஓடிடி தளத்தில் காணலாம்.

இந்தப் படத்தில் ஷாமலா ஹம்சா, முஸ்தஃபா சர்கம், குமார் சுனில் ஆகியோர் பிரதான பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Summary

Let's see which films and web series are releasing on OTT platforms this week.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com