யூடியூப் நிறுவனம் ஆஸ்கர் சார்ந்த நிகழ்ச்சிகளின் ஒளிபரப்பு உரிமத்தைப் பெற்றுள்ளது.
திரைத்துறையினருக்கு வழங்கப்பட்டும் மிகப்பெரிய விருது மற்றும் அங்கீகாரங்களில் ஒன்றாகக் கருதப்படும் அகாடெமி விருதுகள் என அழைக்கப்படும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் நிகழ்வு ஆண்டுதோறும் அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது.
ஆஸ்கர் விருதுகள் வழங்கும் நிகழ்வை இதுவரை அமெரிக்காவின் ஏபிசி தொலைக்காட்சி சேனலே நேரடியாக ஒளிபரப்பி வருகிறது.
இந்த நிலையில், வருகிற 2029 முதல் 2033 வரை ஆஸ்கர் நிகழ்வுகளை ஒளிபரப்பும் உரிமத்தை யூடியூப் தளத்திற்கு வழங்கவுள்ளதாக அகாதெமி நிர்வாகிகள் முடிவு செய்திருக்கின்றனர்.
அதிகப்படியான ரசிகர்களைச் சென்றடையவும் கலாசார நிகழ்வுகளை விரிவுப்படுத்தவும் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அகாதெமி தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: சகோதரர்களாக சிவகார்த்திகேயன் - அதர்வா!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.